தென்னிந்திய சினிமா

பான் இந்தியா படத்தில் ரவிதேஜா

செய்திப்பிரிவு

ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகில், மாஸ் மஹாராஜா என்று அழைக்கப்படுபவர் ரவி தேஜா. இவர் இயக்குநர் கோபிசந்த் மலினேனியுடன் மீண்டும் இணை கிறார். இவர் இயக்கத்தில், ‘டான் சீனு’, ‘பலுபு’, ‘க்ராக்’ ஆகிய படங் களில் ரவிதேஜா நடித்துள்ளார்.

இது இவர்கள் இணையும் நான்காவது படம். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவிசங்கர் மெகா பட்ஜெட்டில் தயாரிக்கின்றனர். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இதன் கதை அமைக்கப் பட்டுள்ளது. தமன் இசையமைக்கிறார். இதுவரை தோன்றாத வித்தியாசமான கதாபாத்திரத்தில் ரவி தேஜா நடிக்கிறார். இந்தப் படம் பான் இந்தியா முறையில் வெளியாக இருக்கிறது.

SCROLL FOR NEXT