தென்னிந்திய சினிமா

டொவினோ தாமஸ் படத்தில் த்ரிஷா ஒப்பந்தம்

செய்திப்பிரிவு

மலையாள நடிகர் டொவினோ தாமஸ் நடிக்கும் ‘ஐடன்டிடி’ (identity) படத்தில் நடிகை த்ரிஷா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இயக்குநர்கள் அகில் பால், அனஸ் கான் இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் ‘ஃபாரன்ஸிக்’ (Forensic). டொவினோ தாமஸ், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் அந்த ஆண்டின் வெற்றிப் படமாக அமைந்தது. இந்நிலையில், இந்தக் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அகில் பால்,அனஸ்கான் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடிக்கும் புதிய படத்துக்கு ‘ஐடன்டிடி’ (identity) என பெயரிடப்பட்டுள்ளது.

ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தின் நாயகி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், நடிகை த்ரிஷா படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது.

இது தொடர்பாக நடிகர் டோவினோ தாமஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “அற்புதமான திரைப்படத்தில் நடிகை த்ரிஷாவுடன் கைகோப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். படப்பிடிப்பை எதிர்நோக்கி உற்சாகமாக காத்திருக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT