தென்னிந்திய சினிமா

அமெரிக்காவில் ‘புராஜெக்ட் கே’: தலைப்பு வெளியீடு 

செய்திப்பிரிவு

ஹைதராபாத்: பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் படம், ‘புராஜெக்ட் கே’. இதில் நடிகர்கள் கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உட்பட பலர் நடிக்கின்றனர். சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகும் இதை ‘நடிகையர் திலகம்’ படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குநர் நாக் அஸ்வின் இயக்குகிறார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கிறது. இந்தப் படம் அமெரிக்காவின் சான் டியாகோ நகரில் நடைபெறும் காமிக்–கான் சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்கிறது. வரும் 20-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடக்கும் அந்த நிகழ்வில் ‘புராஜெக்ட் கே’ படத்தின் தலைப்பு, டிரெய்லர், ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. இதற்காக கமல்ஹாசன், பிரபாஸ் உட்பட படக்குழுவினர் அங்கு செல்ல உள்ளனர். இந்த நிகழ்வில் பங்குகொள்ளும் முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை, இது பெற்றுள்ளது. இதுபற்றி நடிகர் அமிதாப்பச்சன், இது பெருமையான தருணம் என்றும் இந்த நம்ப முடியாத அனுபவத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT