தென்னிந்திய சினிமா

சினிமாவில் இருந்து விலகுகிறாரா சமந்தா?

செய்திப்பிரிவு

ஹைதராபாத்: நடிகை சமந்தாவுக்கு கடந்த வருடம் தசை அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சில மாதங்கள், படப்பிடிப்பை விட்டுவிட்டு தீவிர சிகிச்சை மேற்கொண்டார். பின்னர் அதிலிருந்து மீண்ட அவர், மீண்டும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமந்தா நடிப்பில் இருந்து தற்காலிகமாக விலக முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் புதிய படங்கள் எதையும் அவர் ஏற்கவில்லை. தசை அழற்சி நோய்க்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாகவும் குணமடைந்ததும் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT