அஷு ரெட்டி 
தென்னிந்திய சினிமா

போதை பொருள் வழக்கில் தொடர்பா? - நடிகை எச்சரிக்கை

செய்திப்பிரிவு

ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகில், போதை பொருள் பயன்பாடு குறித்து 2017-ம் ஆண்டு கலால் துறை விசாரித்தது. இதில் ரவி தேஜா, சார்மி, ரகுல் ப்ரீத் சிங்,புரி ஜெகநாத் உட்பட பல திரை பிரபலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தெலுங்கு தயாரிப்பாளர் கே.பி.சவுத்ரி கைது செய்யப்பட்டார். அவரிடம் 90 பாக்கெட் ‘கொக்கைன்’ பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நடிகைகள் சுரேகா வாணி, அஷு ரெட்டி உட்பட பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அஷு ரெட்டி அடிக்கடி அவருக்கு போன் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவரிடம் விசாரணை நடத்த இருப்பதாகவும் தெரிகிறது.

ஆனால், இதை மறுத்துள்ள அஷு ரெட்டி, “என்னைப் பற்றி அவதூறு செய்திகள் பரப்பப்படுவதைக் கண்டிக்கிறேன். உண்மை நிலையை விரைவில் விளக்குவேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும் பொதுவெளியில் தனது தொலைபேசி எண்ணை வெளியிட்டால் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் எச்சரித்துள்ளார்.

SCROLL FOR NEXT