தென்னிந்திய சினிமா

தொலைக்காட்சி திரையிடலிலும் சாதனை புரிந்தது பாகுபலி 2

ஸ்கிரீனன்

திரையரங்க வசூல் சாதனையைத் தொடர்ந்து, தொலைக்காட்சி திரையிடலிலும் பெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது 'பாகுபலி 2'

இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்போடு, ஏப்ரல் 28-ம் தேதி வெளியான படம் 'பாகுபலி 2'. ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், நாசர், ராணா, தமன்னா நடிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றது. உலகளவில் இந்தியப் படங்களில் அனைத்து வசூல் சாதனையை முறியடித்தது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் பெரும் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது 'பாகுபலி 2'. தற்போது தொலைக்காட்சி ஒளிபரப்பிலும் தனது முத்திரையை பதித்திருக்கிறது.

'பாகுபலி 2' திரைப்படம் ஒரே நேரத்தில் அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பட்டது. அதில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்றிலுமே சாதனையை புரிந்துள்ளது BRAC INDIA தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்திருக்கிறது.

சோனி மேக்ஸ் திரையிடலில் வழக்கத்தை விட 6.7% உயர்வும், ஸ்டார் மா திரையிடலில் வழக்கத்தை விட 3% உயர்வும், ஸ்டார் விஜய் திரையிடலில் வழக்கத்தை விட 5% உயர்வும் பெற்றிருக்கிறது.

BRAC INDIA நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பால், படக்குழுவும் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது.

SCROLL FOR NEXT