தென்னிந்திய சினிமா

2 மாதங்களில் 3-வது முறையாக ரசிகரின் கன்னத்தில் அறைந்தார் பாலகிருஷ்ணா

செய்திப்பிரிவு

நடிகரும் தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏவுமான பாலகிருஷ்ணா இந்துப்பூரில் தன்னுடைய ரசிகர் ஒருவரைக் கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தன்னுடைய தொகுதிக்கு 3 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பாலகிருஷ்ணா, போயப்பேட்டா பகுதியில் வீடு, வீடாகச் சென்று பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். ஒரு வீட்டுக்குள் நுழைய முயற்சித்த பாலகிருஷ்ணாவை முந்திக் கொண்டு அவரின் ரசிகர் ஒருவர் முன்னே சென்றார். இதனால் கோபமடைந்த பாலகிருஷ்ணா ரசிகரின் கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் எதுவுமே நடக்காதது போல் வீட்டுக்குள் சென்றுவிட்டார்.

சிறிது நேரத்தில் ஹைதராபாத் செல்ல பெங்களூரு விமான நிலையம் நோக்கிச் சென்றார் பாலகிருஷ்ணா. இருப்பினும் நடந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளன.

இதுவரை யாரும் காவல்துறையில் புகார் கொடுக்கவில்லை என்றாலும், இந்த சம்பவம் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த இரண்டு மாதங்களில் பாலகிருஷ்ணா 3 முறை தனது ரசிகர்களை அறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பாலகிருஷ்ணா வீடியோ

 பாலகிருஷ்ணா வீடியோ 

SCROLL FOR NEXT