தென்னிந்திய சினிமா

பிரபல மலையாள இயக்குநர் ஐ.வி.சசி காலமானார்

செய்திப்பிரிவு

பிரபல மலையாளத் திரைப்பட இயக்குநர் ஐ.வி.சசி சென்னையில் இன்று (அக்.24) காலமானார். அவருக்கு வயது 69.

'ஆள்கூட்டத்தில் தனியே', 'அக்ஷரங்கள்',  'வாடகைக்கு ஒரு ஹ்ருதயம்', 'காணாமரயத்து' ஆகிய திரைப்படங்களை இயக்கியவர்.

மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், ஜெயன், சுகுமாரன், சோமன், வின்சென்ட், சீமா ஆகிய நடிகர்களை பெரும் நட்சத்திரமாக்கிய பங்கு, ஐ.வி.சசிக்கு உண்டு. பின்னாளில் அவர் நடிகை சீமாவைத் திருமணம் செய்து கொண்டார்.

1968-ம் அண்டு கலை இயக்குநராகும் ஆசையுடன் சென்னை வந்த ஐ.வி.சசி, 'உல்சவம்' படத்தின் மூலம் இயக்குநரானார். அன்றிலிருந்து 40 ஆண்டு காலம் மலையாளம், தமிழ், இந்தி என பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்களை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT