மற்றவை

விழாக்களில் யானைகளை பயன்படுத்த வேண்டாம்: கேரள முதல்வருக்கு ஹாலிவுட் நடிகை பமீலா வேண்டுகோள்

பிடிஐ

‘‘கேரள திருவிழாக்களின்போது யானைகளைப் பயன்படுத்த வேண் டாம்’’ என்று முதல்வர் உம்மன் சாண்டிக்கு, பிரபல ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் திருவிழாக்களின் போது யானைகள் பயன்படுத்தப்படு கின்றன. அலங்கரிக்கப்பட்ட யானை கள் ஊர்வலம் நடத்தப்படுகிறது. எனினும் கேரள மாநிலத்தில் கோயில் திருவிழாக்களின்போது யானைகள் அணிவகுப்புக்கு முக்கி யத்துவம் தரப்படுகிறது. அந்த மாநிலத்தில் புகழ்பெற்ற திரிச்சூர் பூரம் திருவிழா இன்னும் சில நாட்களில் வெகு விமரிசை யாகக் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. மேலும் திரு விழாவின்போது யானைகள் அணிவகுப்புக்காக அவற்றை தயார்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருவிழாக்களின் போது யானைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று கேரள முதல் வர் உம்மன் சாண்டியை, பிர பல ஹாலிவுட் நடிகை பமீலா ஆண் டர்சன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து உம்மன் சாண்டிக்கு, பமீலா அனுப்பி உள்ள இ-மெயிலில் கூறியிருப்பதாவது: யானைகளை அடைத்து வைத்து பயன்படுத்துவதற்கு இப்போது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது உங்களுக்குத் தெரியும் என்று நம்பு கிறேன். இந்தியாவிலும், உலக ளவிலும் யானைகளைப் பயன் படுத்துவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மக்களின் மனநிலை, கருத்து மாறி வருகிறது. திரிச்சூரில் உள்ள வடக்கு நாதன் கோயிலில் பூரம் திருவிழாவுக் காக, யானைகள் அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது. திருவிழாவின் போது யானைகளின் அணி வகுப்பை நீங்கள் தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கை களை நீங்கள் எடுத்தால், உலக மக்கள் உங்களை பாராட்டுவார்கள்.

கூண்டுகளில் யானைகளை அடைத்து வைத்து சித்ரவதை செய்கின்றனர். யானைகளின் கால்களில் இரும்பு சங்கிலிகளை கட்டி இழுத்து செல்கின்றனர். வெயிலில் தகிக்கும் சாலைகளில் நடத்தி செல்கின்றனர். மேலும் அங்குசத்தால் அடித்து யானை களை பாகன்கள் கட்டுப்படுத்து கின்றனர். அவற்றை எல்லாம் பார்க்கும் மக்கள் வேதனைப்படு கின்றனர்.

யானைகளைப் பயன்படுத்து வதற்கு பதில், மூங்கில் களால் உருவாக்கப்பட்ட தத்ரூப மாகக் காட்சி அளிக்கக்கூடிய, 30 யானை உருவங்களை உருவாக்கு வதற்கான செலவை நான் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன். எனவே, யானை களை திருவிழாக்களில் பயன்படுத்த வேண்டாம். இவ்வாறு பமீலா ஆண்டர்சன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT