மற்றவை

‘அண்ணாமலை குடும்பம்’ மெகா தொடர்: விளம்பரத்துக்கு 230 அடி சேலை

செய்திப்பிரிவு

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘அண்ணாமலை குடும்பம்’ என்ற புதிய மெகா தொடர் நவ.24-ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 2:30 மணிக்கு ஒளிபரப்பாகும் இத்தொடரில் ஆஷிஷ், சாதனா, ஸ்ரீவித்யா, தீபிகா, மானஸ், ஷெரின், அரவிந்த் ராஜ், கிரிஷ், ரவிகாந்த், தேஜா, யுக்தா, ரூபா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

கூட்டு குடும்பத்தில் உள்ள உணர்வுகளின் உணர்ச்சிகரமான பயணத்தை எடுத்துரைக்கும் வகையில் இத்தொடர் உருவாகியுள்ளது. அண்ணா மலை என்ற பெண்மணி, அண்ணாமலை சில்க்ஸ் என்ற ஜவுளிக்கடை மூலம் பெரிய சாம் ராஜ்யத்தை உருவாக்குகிறார். தனது குடும்பம் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது அண்ணாமலையின் ஆசை.

இந்த குடும்பத்துக்குள் ஒற்றுமையை விரும்பும் வெண்ணிலா, சுயநலவாதியான வான்மதி என மாறுபட்ட குணாதிசயங்கள் கொண்ட சகோதரிகள், மருமகள்களாக நுழைகிறார்கள். அதற்கு பிறகு அண்ணாமலை குடும்பத்தில் என்ன நடக்கிறது என்பது கதை. இத்தொடரின் விளம்பரத்துக்காக, 230 அடி சேலையை காஞ்சிபுரத்தில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இணைந்து உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT