மற்றவை

நாட்டுக்காக போரிடும் சாமானியர்கள்

செய்திப்பிரிவு

2007-ல் வெளியாகி மிகப் பெரிய வெற்றியடைந்த படம் ‘300’. ஸாக் ஸ்நைடர் இயக்கிய அந்தப் படத்தில் கிரேக்க பிரதேசமான ஸ்பார்ட்டாவை ஆக்கிரமிக்க வரும் பாரசீகப் படைகளை எதிர்கொண்டு போரிட கவுன்ஸிலின் அனுமதி கிடைக்காததால், தனது 300 மெய்க்காப்பாளர்களை மட்டும் வைத்துக்கொண்டு துணிச்சலாகப் புறப்படுவார் ஸ்பார்ட்டா அரசன் லியோனைடஸ். அப்போது அவர்களுடன் இணைந்துப் போரிட முன்வரும் அர்கேடியன்களின் படைப்பிரிவினரிடம் அவர்கள் செய்யும் தொழில் என்ன என்று கேட்பார். தச்சர், பொற்கொல்லர் என்று அவர்கள் பதில் சொல்லும்போது தன் படைப் பிரிவினரிடம் திரும்பி அதே கேள்வியைக் கேட்பார். அப்போது அந்த 300 வீரர்களும் தங்கள் ஈட்டிகளை உயர்த்தி வீர முழக்கமிடுவார்கள். அதாவது, பிறப்பிலிருந்து அவர்களுக் குத் தெரிந்த ஒரே தொழில் போரிடுவது தான். ‘300’ படத்தின் உத்வேகமான காட்சிகளில் அதுவும் ஒன்று.

ஏழு ஆண்டுகள் கழித்து அந்தப் படத்தின் இரண்டாம் பாகமான ‘300: ரைஸ் ஆப் என் எம்பயர்’ படம் இந்தி

யாவில் வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் பெரும் பலம் படைத்த பாரசீகப் படைகளை அழிக்க முன்வருபவர்கள் தொழில் முறைப் போர்வீரர்கள் அல்ல. கவிஞர்கள் முதல் குயவர்கள் வரை ஸ்பார்ட்டாவின் சாதாரணக் குடிமக்கள் இணைந்து தங்கள் தாய்நாட்டுக்காகப் போரிடுகின்றனர்.போர்க்களக் காட்சிகள் படமாக்கப்பட்ட விதத்துக்காக ‘300’ படம் மிகவும் புகழ்

பெற்றது. அதில் மலையிலும், கடலோரத்தி லும் நடந்த சண்டை இரண்டாம் பாகத்தில் கடலுக்கு இடம்பெயர்ந்துள்ளது. தரைப்படை களுடன் கப்பற்படைகளும் போரில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் கொண்ட இந்தப் படத்தி

லும் தொழில்நுட்பம் தான் தூணாக இருக் கிறது. படத்தை இம்முறை ஸாக் ஸ்நைடர் இயக்கவில்லை. மாறாக படத்தின் தயாரிப்பா ளராகவும் திரைக்கதையாசிரியராகவும் அவர் பணிபுரிந்திருக்கிறார். படத்தை இயக்கியிருப்பவர் நோம் முர்ரோ என்ற புதியவர்.

பிராங்க் மில்லர் என்ற காமிக்ஸ் ஜாம் பவான் உருவாக்கிய கிராபிக் நாவலை அடிப்படையா கக் கொண்டு தான் ‘300’ திரைப்படம் தயாரிக்கப்பட்டது. இரண்டாம் பாகமும் அவரது ‘செர்செஸ்’ என்ற கிராபிக் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT