‘ரெட்ரோ’, ‘ஜன நாயகன்’ என தமிழில் வரிசைகட்டும் நடிகை பூஜா ஹெக்டேவின் சமீபத்திய இன்ஸ்டா பதிவு புகைப்படங்கள் வெகுவாக கவனம் ஈர்த்துள்ளன.
தமிழில் ‘முகமூடி’ படம் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே தெலுங்கு, இந்தி, தமிழ்ப் படங்களில் நடித்துப் பிரபலமானார்.
தமிழில் இப்போது கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் பூஜா ஹெக்டே.
விஜய்யின் ‘பீஸ்ட்’ படம் மூலம் தமிழுக்கு மீண்டும் வந்த பூஜா ஹெக்டே, தொடர்ச்சியாக முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள ‘ரெட்ரோ’ படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார்.
மே 1-ல் வெளியாகும் ‘ரெட்ரோ’ படத்துக்கு ரசிகர்கள் மட்டுமின்றி பூஜா ஹெக்டேவும் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்.
‘ரெட்ரோ’ படத்துக்காக பூஜா ஹெக்டே முதல் முறையாக, தமிழில் டப்பிங் பேசியுள்ளார்.
சொந்தக் குரலில் டப்பிங் பேசுவதற்காக பூஜா ஹெக்டே கடுமையான பயிற்சி மேற்கொண்டதாக ‘ரெட்ரோ’ படக்குழு தெரிவித்துள்ளது.
‘ரெட்ரோ’வைத் தொடர்ந்து விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்தில் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே.
இதனிடையே, ரஜினியின் ‘கூலி’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறார் பூஜா ஹெக்டே. முன்னணி நடிகையாக இருந்தாலும், திரைப்படங்களுக்கான ஆடிஷனின் பங்கேற்பதில் ஈடுபாடு காட்டும் பூஜா ஹெக்டேவின் போக்கு கவனம் ஈர்த்துள்ளது.
படப்பிடிப்பு பிஸி ஷெட்யூலுக்கு நடுவே தனது இன்ஸ்டா பக்கத்தில் அப்டேட்களை பகிர்ந்து ரசிகர்களை எப்போதும் எங்கேஜிங்காக வைத்திருப்பவர் பூஜா ஹெக்டே.