கருப்பு உடையில் கவர்ந்திழுக்கும் லுக்குடன் நடிகை ஸ்ருதி ஹாசன் பகிர்ந்துள்ள புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகின்றனர்.
‘சலார் 2’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் ஸ்ருதி ஹாசன்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினியின் ‘கூலி’ படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.
“ரஜினியுடன் நடிப்பது சிறந்த அனுபவம். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள முடிகிறது” என்பது ஸ்ருதியின் ஸ்டேட்மென்ட்.
‘ஜன நாயகன்’ படத்தில் விஜய்யுடன் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.
கலைத்துறையில் தனித்துவம் காட்டி வரும் ஸ்ருதி, “அப்பாவின் புகழிலிருந்து பிரிந்து செல்வது கடினமாக இருந்தது” என்றும் சமீபத்தில் குறிப்பிட்டார்.
திருமணம் குறித்த ஸ்ருதியின் பார்வையும் கவனிக்கத்தக்கது. “திருமணம் செய்வதை விட ரிலேஷன்ஷிப் பிடிக்கும்” என்பார்.
“வாழ்க்கையில் எதையும் கணிக்க முடியாது. ஆகையால் எனக்கு ரிலேஷன்ஷிப் பிடிக்கும், ரொமான்ஸ் பிடிக்கும்” என்பார் வெளிப்படையாக.
பிஸி ஷெட்யூலுக்கு இடையே விதவிதமான போட்டோ ஷூட் பங்களை அப்டேட் செய்து ரசிகர்களை எங்கேஜ் செய்து வருகிறார் ஸ்ருதி ஹாசன்.