மற்றவை

Click Bits: அமலா பாலின் அசத்தலான கேஷுவல் க்ளிக்ஸ்!

ப்ரியா

அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த கேஷுவல் புகைப்படங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.

2009-ம் ஆண்டு வெளியான ‘நீல தாமரா’ என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார் அமலா பால்.

‘சிந்து சமவெளி’ மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து ‘மைனா’ திரைப்படம் அவருக்கென தனி அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது. 2011-ல் வெளியான ‘தெய்வ திருமகள்’ படத்தில் அமலா பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

‘வேட்டை’, ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’, ‘தலைவா’ படங்களில் நடித்தார். ‘அம்மா கணக்கு’, ‘ஆடை’, ‘கடாவர்’ படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார்.

மலையாளத்தில் ‘ஆடுஜீவிதம்’, அதன்பின் அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக்கிடைக்கும் ‘லெவல் கிராஸிங்’ படங்களில் அமலா பாலின் நடிப்பு பாராட்டப்பட்டது.

ஜகத் தேசாயை திருமணம் செய்தார். இவர்களது குழந்தைக்கு ‘இலை’ என்று பெயர் சூட்டினர். ‘லெவல் கிராஸிங்’ படத்துக்குப் பிறகு சற்றே ஓய்விலும், குழந்தைகளை கவனிப்பதிலும் ஈடுபட்டு வருகிறார் அமலா பால்.

SCROLL FOR NEXT