மற்றவை

Click Bits: நெட்டிசன்கள் தேடும் ‘டிராகன்’ நாயகி கயாடு லோஹர்!

செய்திப்பிரிவு

சமூக வலைதளங்களில் எங்கு திரும்பினாலும் கயாடு லோஹர் தான். ’டிராகன்’ படம் வெளியான பிறகு அவரது ரீல்களும், புகைப்படங்களும் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ’டிராகன்’ படம் பெரும் வெற்றி பெற்றதையெடுத்து அதில் நடித்த கயாடு லோஹர் சமூக வலைதளங்களில் பெரும் சென்சேஷன் ஆகிவிட்டார்.

கயாடு லோஹரின் புகைப்படங்களை பல பரிமாணங்களில் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த கயாடு லோஹர், 2021ல் வெளியான ‘முகில்பெடெட்’ என்ற மலையாளப் படத்தில் அறிமுகம் ஆனார்.

பிறகு 2022ல் வெளியான ‘அல்லுரி’ என்ற தெலுங்கு படத்தில் ஸ்ரீவிஷ்ணுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

எனினும் ‘டிராகன்’ படமே அவரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக்கியுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கில் அதிகம் தேடப்படும் ஹீரோயினாக மாறியுள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT