குடும்பஸ்தன் படம் மூலம் கவனம் பெற்ற சான்வே மேகனாவின் சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
மணிகண்டன் நடிப்பில் வெளியாகியுள்ள குடும்பஸ்தன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
முதல் 5 நாட்களில் இந்திய அளவில் இப்படம் ரூ.8 கோடியை கடந்துள்ளது. சிறிய பட்ஜெட் படத்துக்கு இது பெரிய வசூல் என்கிறார்கள்.
இப்படத்தின் நாயகியாக நடித்துள்ள சான்வே மேகனாவின் நடிப்பை விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்.
தெலுங்கில் ‘புஷ்பக விமானம்’, ‘பிரேம விமானம்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
எனினும் அப்படங்களின் மூலம் பெரியளவில் அவர் அறியப்படவில்லை.
ஆனால் தமிழில் ‘குடும்பஸ்தன்’ மூலம் அறிமுகமான இவர், முதல் படத்திலேயே கவனிக்க வைத்துள்ளார்.