கடந்த ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த ‘லப்பர் பந்து’ படத்தின் நாயகி சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
கடந்த 2022-ம் ஆண்டு அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது ‘வதந்தி’ இணையத் தொடர்.
‘வதந்தி’ வெப் சீரிஸில் வெலோனி கதாபாத்திரத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி.
இந்த இணையத் தொடரை தொடர்ந்து அவர் நடித்த படம் ‘லப்பர் பந்து’.
ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சஞ்சனா.
இது தவிர மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’ படத்தில் உதவி இயக்குநராகவும், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகையாகவும் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்ற சஞ்சனாவின் சமீபத்திய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.