மற்றவை

மணக்கோலத்தில் அதிதி ராவ் - சித்தார்த் க்ளிக்ஸ்! 

செய்திப்பிரிவு

நடிகை அதிதி ராவ் - சித்தார்த் திருமணம் செப்டம்பர் மாதம் நடைபெற்ற நிலையில், அது தொடர்பான புகைப்படங்களை அதிதி ராவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ‘பிரஜாபதி’ மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் அதிதி.

‘டெல்லி 6’, ‘ராக்ஸ்டார்’, ‘மர்டர் 3’ ஆகிய இந்திப் படங்களில் நடித்தார்.

2017-ல் வெளியான ‘காற்று வெளியிடை’ படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்தார்.

‘செக்க சிவந்த வானம்’, ‘சைகோ’ படங்களில் நடித்து கவனம் பெற்றார்.

2020-ம் ஆண்டு வெளியான ‘சுவீயும் சுஜாதேவும்’ மலையாள படம் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நடிகை அதிதி ராவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

நடிகர் சித்தார்த், 'மகா சமுத்திரம்' என்ற தெலுங்குப் படத்தில் அதிதி ராவ் ஹைதாரியுடன் இணைந்து நடித்தார்.

அப்போதிருந்து இருவரும் காதலித்து வருவதாகச் செய்திகள் வெளியாயின.

அதை உறுதிப்படுத்தும் விதமாக, பட விழாக்களுக்கு இருவரும் ஒன்றாகச் செல்வதும் அது தொடர்பான புகைப்படங்களை வெளியிடுவதுமாக இருந்தனர்.

இவர்கள் திருமணம், தெலங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டம் ஸ்ரீரங்கபூரில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ரங்கநாயக சுவாமி கோயிலில் செப்டம்பர் மாதம் நடைபெற்றது.

இதில், ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இயக்குநர் மணிரத்னம், கமல்ஹாசன் மற்றும் மணமக்களின் நெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் திருமண ஆல்பத்தை வெளியிட்டுள்ளனர்.

இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

SCROLL FOR NEXT