மற்றவை

விழியசைவில் வலை... கிருத்தி சனோன் க்ளிக்ஸ் அணிவகுப்பு!

செய்திப்பிரிவு

நடிகை கிருத்தி சனோனின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளன.

2014-ம் ஆண்டு வெளியான ‘நெனக்கோடின்’ தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் கிருத்தி சனோன்.

அடுத்து ‘ஹீரோ பண்டி’ பாலிவுட் படத்தில் நடித்தார்.

மீண்டும் தெலுங்குக்கு திரும்பிய அவர் ‘தோ சாய்’ படத்தில் நடித்தார்.

2015-ல் வெளியான ‘தில்வாலே’ படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்தார்.

‘ரப்டா’, ‘பரேலி கி பர்ஃபி’ ஆகிய பாலிவுட் படங்களில் நடித்து வளர்ந்தார்.

‘ஹவுஸ் ஃபுல் 4’, ‘பானிபட்’ என பாலிவுட்டில் கவனம் செலுத்தி கிருத்தி சில படங்களில் சிறப்பு தோற்றங்களிலும் நடித்தார்.

அவரது நடிப்புக்கு அங்கீகாரம் பெற்றுக் கொடுத்தது 2021-ல் வெளியான ‘mimi’ திரைப்படம்.

இந்தப் படத்தில் கிருத்தியின் நடிப்பு கவனம் பெற்றது.

கடந்த ஆண்டு வெளியான ‘ஆதி புருஷ்’ படத்தில் பிரபாஸூடன் இணைந்து நடித்திருந்தார்.

பாலிவுட் மூத்த நடிகைகளான கரீனா கபூர், தபுவுடன் இணைந்து ‘crew’ படத்தில் நடித்திருந்தார். படம் ரூ.100 கோடியை வசூலித்தது.

SCROLL FOR NEXT