மற்றவை

ஜீ தமிழில் புதிய மெகா தொடர்

செய்திப்பிரிவு

ஜீ தமிழ் சேனலில் ‘மவுனம் பேசியதே’ என்ற புதிய மெகா தொடர் மதியம் ஒரு மணிக்கு ஒளிபரப்பாகிறது. அசோக், ஜோவிதா லிவிங்ஸ்டன், இரா அகர்வால், சத்யா உட்பட பலர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விருப்பத்துடன் ஒரு ஜோடிக்கும் விருப்பமில்லாமல் ஒரு ஜோடிக்கும் திருமணம் நடக்கிறது. ஒரு பேருந்து விபத்தில் ஜோடி மாறி வாழ்க்கையில் ஒன்று சேர வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இதைத் தொடர்ந்து நடக்கும் சவால்கள்தான் இதன் கதைக்களம். இந்த ‘மவுனம் பேசியதே’ தொடர் மதியம் ஒரு மணிக்கு ஒளிபரப்பாவதால் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் அதே நேரத்தில் ஒளிப்பரப்பாகி வந்த ‘இதயம்’ தொடர், 1.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

SCROLL FOR NEXT