சின்னத்திரை பிரபலமான கேபிஒய் பாலா, ‘ராக்காயி’ என்ற இசை ஆல்பத்தில் நடித்துள்ளார். இதில் சேத்தன், தேவதர்ஷினி தம்பதியின் மகளான நியதி முதன்மை வேடத்தில் நடித்துள்ளார்.
நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் அங்கமான பிங்க் ரெக்கார்ட்ஸ் தயாரித்துள்ளது. கார்த்திக் ஸ்ரீநிவாஸ், மஹாவீர் அஷோக் தயாரித்துள்ளனர். ஏ.கே. பிரியன் இசை அமைத்துள்ள இந்தப் பாடலை மு.வி. எழுதியுள்ளார். கார்த்திக் ஸ்ரீநிவாஸ், வ்ருஷா பாலுவுடன் இணைந்து பாடியுள்ளார். விர்ச்சுவல் செட் புரொடக்ஷன் டெக்னாலஜி எனும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு அபு மற்றும் சல்ஸ் இயக்கி நடனம் அமைத்துள்ளனர். பிங்க் ரெக்கார்ட்ஸ் யூடியூப் தளத்தில் இந்தப் பாடல் வெளியாகியுள்ளது. வீடியோ லிங்க்...
<iframe width="681" height="383" src="https://www.youtube.com/embed/Tlc6rUcv97o" title="Rakkayi | Music Video | KPY Bala | Niyathi | Noise and Grains | Ping Records" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe>