நடிகை நிகிலா விமலின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டுள்ளது. எக்ஸ் தளத்தில் படங்கள் வைரலாகி வருகின்றன.
அண்மையில் மலையாளத்தில் வெளியான ‘குருவாயூர் அம்பல நடையில்’ படத்தில் நடித்திருந்தார் நிகிலா விமல்.
இதில் இடம்பெற்ற ‘அழகிய லைலா’ பாடலின் ரீமேக் வெர்ஷன் நிகிலா விமலின் காட்சிகளும் படு வைரலானது.
அதேபோல அவர் ‘வாழை’ படத்தில் நடித்தார். இதில் அவரது ஆசிரியர் கதாபாத்திரம் ரசிகர்களிடையே கவனம் பெற்றது.
2016-ல் வெளியான சசிகுமாரின் ‘வெற்றிவேல்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் நிகிலா விமல்.
‘கிடாரி’, ‘ரங்கா’, ‘போர்த்தொழில்’ என பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.