நடிகை மாளவிகா மோகனின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. சமூக வலைதளங்களில் இந்தப் படங்கள் வைரலாகி வருகின்றன.
அண்மையில் தமிழில் வெளியான பா.ரஞ்சித்தின் ‘தங்கலான்’ படத்தில் மாளவிகா மோகனின் கதாபாத்திரமும், அவரது நடிப்பும் பாராட்டப்பட்டது.
அடுத்து அவர் கார்த்தியுடன் இணைந்து ‘சர்தார் 2’ படத்தில் நடிக்கிறார்.
பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘தி ராஜா சாப்’ படத்தின் நடிக்கிறார். இதன் மூலம் அவர் தெலுங்கில் நடிகையாக அறிமுகமாகிறார்.
விஜய்யுடன் இணைந்து அவர் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் தமிழில் அவருக்கான ரசிகர்களை உருவாக்கி கொடுத்தது.
மாளவிகாவின் இன்ஸ்டாகிராம் படங்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது.