சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.
‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘கங்குவா’. இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தேவிஸ்ரீ பிரசாத் படத்துக்கு இசையமைத்துள்ளார். ஞானவேல் ராஜா தனது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மூலம் படத்தை தயாரித்துள்ளார்.
பீரியட் ட்ராமா கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வரும் அக்டோபர் 26-ம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் நவம்பர் 14-ம் தேதி படம் வெளியாக உள்ளதால், படக்குழு புரமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.
குறிப்பாக மும்பை, டெல்லி, உள்ளிட்ட வட மாநிலங்களில் நடிகர் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், ஆகியோர் புரமோஷன் பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர்.
இயக்குநர் சிறுத்தை சிவாவும் சில நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.