மற்றவை

நிலவு ஒரு பெண்ணாகி... - அசர வைக்கும் நிமிஷா சஜயன் க்ளிக்ஸ்!

செய்திப்பிரிவு

மலையாளம், தமிழ் என கலக்கிக் கொண்டிருக்கும் நிமிஷா சஜயன் இன்ஸ்டாகிராமிலும் தனது புகைப்படங்களின் வாயிலாக ரசிகர்களை அசரடித்துக் கொண்டிருக்கிறார்.

மலையாளத்தில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நிமிஷா சஜயன்.

தமிழில் ‘சித்தா’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘மிஷன்’ ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

மலையாள சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக புகழப்படும் நிமிஷா, ’தி கிரேட் இண்டியன் கிச்சன், ‘மாலிக்’, ‘தொண்டிமுதலும் திரிக்‌ஷாக்‌ஷியும்’, ‘நாயாட்டு’ உள்ளிட்ட படங்களின் மூலம் பேசப்பட்டார்.

2019ஆம் ஆண்டு கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார்.

இதுதவிர பிலிம்ஃபேர், கேரளா பிலிம் கிரிடிக்ஸ் அசோசியேஷன் உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் வென்றுள்ளார்.

சமூக வலைதளங்களிலும் இவரது புகைப்படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றன.

SCROLL FOR NEXT