நடிகர் சாய் தரம் தேஜ், ஸ்வாதி இணைந்து நடித்துள்ள இசை ஆல்பம், 'சத்யாவின் ஆத்மா' ( Soul Of Satya). ‘சமுத்திரக்கனி இயக்கத்தில் பவன் கல்யாணுடன் நடித்த ‘ப்ரோ’ படத்துக்குப் பிறகு சாய் தரம் தேஜ் இந்த ஆல்பத்தில் நடித்துள்ளார். நவின் விஜய கிருஷ்ணா இயக்கியுள்ள இந்த ஆல்பத்தை நடிகர் ராம்சரண் வெளியிட்டார்.
நாட்டை காக்க, ராணுவ வீரர்கள் எதிர்கொள்ளும் தியாகங்கள் மற்றும் தடைகளைச் சித்தரிப்பதாக அமைந்துள்ளது இந்த ஆல்பம். தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் பாடலுக்கு ஸ்ருதி ரஞ்சனி இசை அமைத்துள்ளார். அவரே பாடியும் உள்ளார். பாடலை, தமிழில் விவேக் ரவி எழுதியுள்ளார். ‘பாலகம்’ என்ற வெற்றிப் படத்தைத் தயாரித்த ஹர்ஷித் ரெட்டி, ஹன்சிதா ரெட்டி இதைத் தயாரித்துள்ளனர்.