மற்றவை

350-வது எபிசோடை கடந்த ’கண்ணெதிரே தோன்றினாள்’

செய்திப்பிரிவு

சென்னை: கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர், ‘கண்ணெதிரே தோன்றினாள்’. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இத்தொடரில், மாளவிகா அவினாஷ், ஸ்வேதா, ஜெயஸ்ரீ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். ஜீவன் ஜி, ரேகா கிருஷ்ணப்பா, கவிதா சோலைராஜா, கோவை பாபு, வைஷு ஜெயச்சந்திரன், தேஜாஸ் கவுடா, மதன், ஜீவிதா, வடிவுக்கரசி உட்பட பலர் நடித்துள்ளனர்.

ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர், கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியது. இந்த தொடர் இப்போது 350- வது எபிசோடை கடந்துள்ளது. இதையடுத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT