டாம் க்ரூஸ் நடித்த ‘டாப் கன்’ திரைப்படம் வெளியாகி 40 ஆண்டுகள் நிறைவடை வதைக் கொண்டாடும் வகையில் இந்தியாவில் திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது.
ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ், புகழ்பெற்ற நடிகராக உயர்வதற்கு முக்கிய காரணமாக இருந்து 1986-ல் வெளியான திரைப்படம், ‘டாப் கன்’. அதிரடி ஆக்சஷன் படமான இதை மறைந்த இயக்குநர் டோனி ஸ்காட் இயக்கி இருந்தார்.
இதில், கெல்லி மெக்கில்லிஸ், வால் கில்மர், அந்தோணி எட்வர்ட்ஸ், மெக் ரியான், டாம் ஸ்கெரிட் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அமெரிக்க விமானப்படை விமானிகளின் வாழ்க்கை முறையைத் தத்ரூபமாகத் திரையில் காட்டிய படம் இது.
‘டாப் கன்’ வெளியாகி 40 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில் இப்படத்தையும் 2022-ம் ஆண்டு வெளியான இதன் தொடர்ச்சியான ‘டாப் கன்: மேவரிக்’ படத்தையும், மே 15-ம் தேதி இந்தியாவில் மீண்டும் வெளியிடுகின்றனர். ஒரு வாரத்துக்கு மட்டும் திரையிடப்படும் என்று பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.