கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியாகி வசூல் சாதனை படைத்து வரும் படம், ‘தி ஒடிஸ்ஸி’.
ஹோமரின் புகழ்பெற்ற கிரேக்கக் காவியமான ‘தி ஒடிஸி’யை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் மேட் டாமன், டாம் ஹாலண்ட், ஆன் ஹாத்வே, ஜெண்டயா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
உலக அளவில் சுமார் ரூ.5,000 கோடிக்கும் மேல் வசூலித்துள்ள இந்தப் படம், சமூக வலைதளங்களிலும், சட்டவிரோத இணையதளங்களிலும் கசிந்தது. லட்சக்கணக்கானோர் கசிந்த பதிப்பைப் பார்த்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து யுனிவர்சல் பிக்சர்ஸ் வெளியிட்ட அறிக்கையில், “ ‘தி ஒடிஸி’ திரைப்படம் அனுமதியின்றி இணையத்தில் பதிவேற்றப்பட்டதை அறிந்ததும் அதை நீக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கினோம்.
பதிப்புரிமை மீறலை மிகவும் தீவிரமாகக் கருதுகிறோம். எங்கள் உள்ளடக்கம் மற்றும் அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்” என்று தெரிவித்துள்ளது.