இயக்​குநர் சக் ரஸ்​ஸல்

 
ஹாலிவுட்

‘தி மாஸ்க்’ இயக்​குநர் சக் ரஸ்ஸல் காலமானார்

நிலா

பிரபல ஹாலிவுட் இயக்​குநர் சக் ரஸ்​ஸல் கால​மா​னார். அவருக்கு வயது 74.

ஜிம் கேரி நடித்து சூப்​பர் ஹிட்​டான ‘த மாஸ்க்’, அர்​னால்ட் ஸ்வாஸ்​நேகர் நடித்த ‘எரேசர்’, கெவின் தில்​லோன் நடித்த ‘த பாப்’, டுவெய்ன் ஜான்​சன் நடித்த ‘த ஸ்கார்​பியன் கிங்’, புரூஸ் வில்ஸ் நடித்த ‘பாரடைஸ் சிட்​டி’, உள்பட ஹாலிவுட்​டில் பல சூப்​பர் ஹிட் படங்​களை இயக்​கிய​வர் சக் ரஸ்​ஸல். கடைசி​யாக ‘விட்ச்​போர்​டு’ (2024) என்ற படத்தை இயக்கி இருந்​தார்.

இவர் இந்​தி​யில், வித்​யூத் ஜாம்​வால் நடித்த ‘ஜங்​கிலீ’ என்ற படத்தையும் இயக்​கி​யுள்​ளார். ஜிம் கேரி, நடிகை கேமரன் டையஸ் ஆகியோரை ‘த மாஸ்க்’ படம் மூலம் உலகப் புகழ்ப் பெறச் செய்தவர் சக் ரஸ்​ஸல். ‘த ஸ்கார்​பியன் கிங்’ மூலம் டுவெய்ன் ஜான்​சனை கதா​நாயக​னாக அறி​முகப்​படுத்​தி​ய​ வரும் இவர்​தான்.

அமெரிக்​கா​வின் சான் டியாகோ​வில் வசித்து வந்த அவர் காலமானார். ஹாரர், அதிரடி மற்​றும் ஃபேண்​டஸி திரைப்படங்களில் தனித்​து​வ​மான பாணியை உரு​வாக்​கிய சக் ரஸ்​ஸலின் மறைவுக்கு ஹாலிவுட் திரை பிரபலங்​கள் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர்.

SCROLL FOR NEXT