ஹாலிவுட்

தி பிக் ஹீட் (1953): பழிவாங்கும் போலீஸ் அதிகாரி | ஹாலிவுட் மேட்னி 53

ராம்குமார் சுப்பாராமன்

ஒரு தற்​கொலை வழக்கை விசா​ரித்​ததன் விளைவாக, பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்ட காவல்​துறை அதி​காரி, அதற்​குக் காரண​மான மாஃபியா கும்​பலை​யும், துணைநிற்​கும் ஊழல் காவல்​துறையையும் எதிர்த்​துப் போராடுவதே ‘தி பிக் ஹீட்’ (THE BIG HEAT - 1953) திரைப்​படத்​தின் ஒரு வரிக் கதை.

மேஜையில் உள்ள துப்​பாக்​கியை ஒரு கை எடுக்​கிறது; டுமீல்! டாம் டங்​கன் என்ற காவல்​துறைப் பணி​யாளர் தற்​கொலை செய்து​கொள்​கிறார். சத்​தம் கேட்டு வந்த அவரது மனைவி பெர்த்தா, அரு​கி​லிருக்​கும் கவரைப் படிக்​கிறாள். அதில் மாஃபியா தலை​வன் மைக் லகானா​வுடனான ஊழல் தொடர்​பு​கள் குறிப்​பிடப்​பட்​டிருப்​பதை அறி​கிறாள். உடனே லகானா​வுக்கு பேசுகிறாள். லகானா தன் கொடுமையான கூட்​டாளி வின்​ஸிற்​குத் தெரியப்​படுத்து​கிறான். இந்த வழக்கை போலீஸ் அதி​காரி டேவ் பானியன் விசா​ரிக்​கிறார்.

‘உடல்​நலக் குறைவால்​தான் டங்​கன் இறந்​தான்’ என்​கிறாள் பெர்த்தா. ஆனால், டங்​க​னின் காதலி லூசி சாப்​மன், அவர் தன் மனைவியை விவாகரத்து செய்​ய​விருந்​த​தாக பானியனிடம் சொல்​கிறாள். பிறகு லூசி கொடூர​மாகச் சித்​திரவதை செய்​யப்​பட்​டுக் கொல்​லப்​படு​கிறாள். இதன் பின்​னணி​யில் லகானா இருப்​பதை அறியும் பானியன், அவனது வீட்​டுக்​குச் சென்று எச்​சரித்து, அவனது ஆட்​களு​டன் மோதுகிறார். விளைவு, பானியனைக் கொல்ல வைக்​கப்​பட்ட கார் வெடிகுண்​டில் அவரது மனைவி கேட்டி கொல்​லப்​படு​கிறாள்.

உயர் அதி​காரி​கள், பழைய எதி​ரி​கள்​மீது பழிபோட முயற்​சிக்க, லகானாவின் உத்​தரவுப்​படி அவர்​கள் செயல்​படுவ​தாக பானியன் குற்​றம் சாட்​டு​கிறார். அவரைப் பணி​யிடைநீக்​கம் செய்​கிறார்​கள். மனைவியைக் கொன்​றவர்​களைத் தனி ஆளாக பழிவாங்க நினைக்​கிறார் பானியன்.

கார் வெடிகுண்​டின் பின்​னணியை விசா​ரிக்​கும் பானியன், தனக்கு கிடைக்​கும் தகவலால் பார் ஒன்​றுக்​குச் செல்​கிறார். அங்கே பெண்​ணின் கையைச் சிகரெட்​டால் சுடும் வின்​ஸிடம் சண்​டை​யிடு​கிறார். இதைக் கவனிக்​கும் வின்​ஸின் காதலி டெபி, பானியனைப் பின்​தொடர்ந்து அவருக்​கும் வின்​ஸுக்​கும் இடை​யி​லான பிரச்​சினையைத் தெரிந்​து​கொள்​கிறாள்.

இதையறியும் வின்ஸ், டெபி மீது சூடான காபியை ஊற்றி முகத்​தைச் சிதைக்​கிறான். காதலனால் முகம் சிதைக்​கப்​பட்ட டெபி, பானியனிடம் அடைக்​கலமாகிறாள். அவள் மூலமாக கேட்​டி​யின் மரணத்​துக்​குக் காரண​மான லாரி கார்​டனையும், வெடிகுண்டு வைக்க உதவிய மெக்​கானிக் ஸ்லிமையும் பற்​றிய தகவல்​களை அறி​கிறார்.

பின்​னர், பெர்த்​தாவைச் சந்​திக்​கும் பானியன், அவள் மாஃபியா கும்​பலை மிரட்​டிப் பணம் பறித்​து சொகுசாக வாழ்​வதைச் சுட்​டிக்​காட்டி எச்​சரிக்​கிறார். பானியன் மூலம் பெர்த்​தாவைப் பற்​றித் தெரிந்​து​கொண்ட டெபி, மொத்​தப் பிரச்சி​னைக்​கும் காரண​மான பெர்த்​தாவின் வீட்​டுக்​குச் சென்று வாக்​கு​வாதம் செய்து அவளைச் சுட்​டுக் கொல்​கிறாள். பிறகு வின்​ஸைத் தேடிச் செல்​லும் அவள், அவன் முகத்​தில் கொதிக்​கும் நீரை ஊற்றி பதிலடி கொடுக்​கிறாள். வின்ஸ் அவளைத் துப்​பாக்​கி​யால் சுடு​கிறான். உயிருக்​குப் போராடும் டெபி​யிடம் அவள் கேட்​டுக் கொண்​டதற்​கிணங்க தன் மனைவி​யின் இனிய நினைவு​களைப் பகிர்ந்​து​கொள்​கிறார் பானியன்.

இறுதி​யில், டங்​கன் விட்​டுச் சென்ற ரகசி​யக் கடிதம் மூலம் லகானாவின் மாஃபியா கும்​பலும் அதற்​குத் துணைபோன ஊழல் அதி​காரி​களும் கைது செய்​யப்​படு​கின்​றனர். இழப்​பு​களைக் கடந்து பானியன் மீண்​டும் காவல்​துறைப் பணிக்​குத் திரும்​புவதோடு படம் நிறைவடைகிறது.

1950-களின் அமெரிக்​கக் குற்​றவுலக அரசி​யல், காவல்​துறை​யின் ஊழல், கேங்க்ஸ்​டர் கும்​பல்​களின் அதி​காரம், பழிவாங்​குதல் ஆகிய​வற்​றைப் பேசும் திரைப்​படம் இது. ஒரு சாதா​ரணத் தற்​கொலை விசா​ரணை​யாகத் தொடங்​கும் கதை, குற்​றவுல​குக்கு எதிரான தனிமனிதப் போராட்​ட​மாக மாறுகிறது.

வில்​லியம் பி. மெக்​கீவர்ன் எழுதிய நாவலை விறு​விறுப்​பான திரைக்​கதையாக மாற்​றியுள்​ளார் சிட்னி போஹ்ம். பெண் கதாபாத்​திரங்​கள் வலு​வாகப் படைக்​கப்​பட்​டிருக்​கின்​றன. குடும்​பப் பாசம் கொண்ட கேட்டி, வன்​முறைக்கு எதிராகத் திரும்​பும் டெபி, சுயநலத்​துக்​காகக் குற்​றவுலக ரகசி​யங்​களைப் பயன்​படுத்​தும் பெர்த்தா என இதில் வரும் பெண் கதாபாத்​திரங்​கள் கதையின் போக்​கைத் தீர்​மானிப்​ப​தில் முக்​கியப் பங்கு வகிக்​கின்​றன.

ஜெர்​மன் எக்ஸ்பிரஷனிசத்​தின் முன்​னோடிகளில் ஒரு​வ​ரான இயக்​குநர் ஃபிரிட்ஸ் லாங், தனது இருண்ட காட்​சி​யமைப்பு, மனிதர்​களின் உளவியல் பல​வீனங்​கள், வன்​முறை​யின் கொடூரத்தை உணர்த்​தும் அணுகுமுறை ஆகிய​வற்​றின் மூலம் இந்​தப் படத்​தைச் சிறப்​பான படைப்​பாக மாற்​றி​யிருக்​கிறார். கொலம்​பியா பிக்​சர்ஸ் சார்​பாக ராபர்ட் ஆர்​தர் தயாரித்​திருக்​கிறார்.

ஒளிப்​ப​திவு - சார்​லஸ் லாங்: கருப்பு வெள்ளை என்​றாலும் கண்​ணுக்கு இத​மான ஒளிப்​ப​திவு. குற்​றவாளி​களின் வீடுகள், ஓட்​டல் அறைகள், பார்​கள், இரவு நேரச் சந்​திப்​பு​கள் என ஒவ்​வொரு இடத்​திலும் பதற்​றமான மன​நிலையை உரு​வாக்​கு​கிறது.

படத்​தொகுப்பு - சார்​லஸ் நெல்​சன்: நிதானமான வெட்​டுகளி​லும் தொய்​வில்​லாத வேகம். விசா​ரணை, குற்​றவாளி​களின் நட​வடிக்​கைகள், டேவின் தனிப்​பட்ட வாழ்க்கை எனக் காட்​சிகள் சீராக நகர்​கின்​றன. இசை - மிஷா பகாலெய்​னிகோஃப்: காட்​சிகளின் உணர்ச்​சியை மிகை​யாகத் திணிக்​காமல் பின்​னணி இசை கதையின் பதற்​றத்​தைத் தாங்​கிச் செல்​கிறது.

கிளென் ஃபோர்ட் - டேவ் பானியன்: நேர்​மையான காவல்​துறை அதி​காரி, அன்​பான கணவர், மகளின்​மீது பாசம் கொண்ட தந்தை, பழிவாங்​கத் துடிக்​கும் மனிதர் என பல பரிமாணங்​களை இயல்​பாக வெளிப்​படுத்து​கிறார். மனைவி​யின் மரணத்​துக்​குப் பிறகு அவருடைய முகத்​தில் தெரியும் வெறுமையும் கோபமும் அருமை.

ஜோசலின் பிராண்டோ - கேட்டி பானியன்: டேவின் மனைவியாக இயல்​பான நடிப்பை வழங்​கி​யிருக்​கிறார். கணவனிடம் அனுமதி கேட்டு ஐ லவ் யூ சொன்​னவள், அடுத்த நிமிடமே குண்​டுவெடிப்​பில் பலியாகி அனைவரை​யும் கண் கலங்க வைக்​கிறார்.

குளோரியா கிரஹாம் - டெபி மார்ஷ்: குற்​றவாளி​யின் அழகிய காதலி. வன்​முறை​யால் பாதிக்​கப்​பட்ட பெண்​ணாகவும், பின்​னர் குற்​றவுல​கத்தை எதிர்க்​கும் பெண்​ணாகவும் மாறுகிறார். அவருடைய நடிப்​பில் திமிர், நகைச்​சுவை, அச்​சம், வலி, பழிவாங்​கும் உணர்வு என பல அம்​சங்​கள் இருக்​கின்​றன.

அலெக்​சாண்​டர் ஸ்​கௌர்பி - மைக் லகானா: குற்​றவுல​கத்​தின் தலை​வன். வெளிப்​படை​யாக மரியாதைக்​குரிய மனித​ராகவும், உள்​ளுக்​குள் கொடூர​மான குற்​றவாளியாகவும் இரு​வித​மான முகங்​களைக் காட்​டு​கிறார்.

லீ மார்​வின் - வின்ஸ் ஸ்​டோன்: கொடூரக் குற்​றவாளியாக, முகபாவனைகளாலும் உடல்​மொழி​யாலும் அச்​சத்தை ஏற்​படுத்து​கிறார். சிகரெட்​டால் பெண்​ணின் கையைச் சுடும் காட்சி மற்​றும் கொதிக்​கும் காபியை டெபி​யின் முகத்​தில் வீசும் காட்​சி​யில் காட்​டும் நடிப்பு நம்மை அவருக்கு வில்​லனாக்​கு​கின்​றன.

ஒரு நகரத்​தின் காவல்​துறையும் அரசி​யல் அதி​கார​மும் குற்​றவாளி​களின் கட்​டுப்​பாட்​டில் இருந்​தால், நீதி என்​பது சாமானிய மனிதனுக்கு எட்​டாக்​க​னியாகி​விடு​கிறது என்​பதை 1953-லேயே அழுத்​த​மாகப் பதிவு செய்​திருக்​கிறது இந்​தப் படம். பழிவாங்​கலை மைய​மாகக் கொண்ட கதையை ஆர்ப்​பாட்​ட​மின்றி, அதன் உணர்​வும் வேகமும் குறை​யாமல் பட​மாக்​கி​யிருக்​கிறார் ஃபிரிட்ஸ் லாங்.

திரைப்​படக் கலை​யின் நுட்​பங்​களை​யும், சிறந்த ஃபிலிம் நுவார் அனுபவத்​தையும் பெற விரும்​புபவர்​கள், இத்​திரைப்​படத்தை ரசித்​துப் பார்க்​கலாம்.

(செவ்​வாய்​தோறும் படம் பார்ப்போம்)

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT