ஹாலிவுட்

‘ஸ்​பைடர்​மேன்’ ஜோடி டாம் ஹாலண்ட் - ஸெண்டயா ரூ.6.40 கோடி செல​வில் ரகசிய திருமணம்?

நிலா

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாலண்ட், ‘ஸ்​பைடர்​மேன்’ வரிசை படங்​கள் மூலம் உலக அளவில் புகழ்​பெற்​றவர். இவரும் ‘ஸ்​பைடர்​மேன்’ படத்​தில் நடித்த ஸெண்​ட​யா​வும் காதலித்து வரு​வ​தாகக் கூறப்​பட்​டது.

திரை​யில் ஜோடி​யாக நடித்த இரு​வரும் நிஜ வாழ்க்​கை​யிலும் இணைய இருப்​ப​தாக வந்த தகவலை, டாம் ஹாலண்ட் உறுதி செய்​திருந்​தார். இரு​வரும் விரை​வில் திரு​மணம் செய்​து​கொள்ள இருப்​ப​தாகப் பேசப்​பட்ட நிலை​யில் ரகசி​ய​மாகத் திரு​மணம் செய்து கொண்​ட​தாகச் செய்​தி​கள் வெளி​யாகி​யுள்​ளன.

இங்​கிலாந்​தின் சர்ரே பகு​தி​யில் உள்ள பிரேவ்​புரூக் என்ற நட்சத்திர ஓட்​டலில் திரு​மணக் கொண்​டாட்​டம் நடைபெற்றதாகவும் இதில் குடும்​பத்​தினர் மற்​றும் நெருங்​கிய நண்​பர்​கள் மட்​டுமே கலந்து கொண்​டனர் என்​றும் தகவல் வெளியாகி​யுள்​ளது. 3 நாட்​கள் நடை​பெற்ற திரு​மணக் கொண்டாட்​டத்​தில் ஹாலிவுட் நடிகர்​கள் உள்பட சுமார் 250 பேர் கலந்து கொண்​ட​தாகக் கூறப்​படு​கிறது.

ரகசி​ய​மாக நடை​பெற்ற இவ்​விழா​வில், புகைப்​படங்​கள் மற்​றும் வீடியோ எடுப்​ப​தைத் தடுக்​கும் வகை​யில் செல்​போன்​கள் எடுத்துச்செல்ல தடை விதிக்​கப்​பட்​டிருந்​தது. இந்த 3 நாள் திருமணக் கொண்​டாட்​டத்துக்கு இந்​திய மதிப்​பில் சுமார் ரூ.6.40 கோடி செலவு செய்​யப்​பட்​ட​தாகக் கூறப்​படு​கிறது.

SCROLL FOR NEXT