அஜித்வாசன் உக்கினா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’. அமானுஷ்ய காதல் கதையைக் கொண்ட இப்படத்தின் மூலம் லண்டனைச் சேர்ந்த தக் ஷ் அறிமுகமாகிறார். போலந்து நாட்டின் வார்சாவைச் சேர்ந்த மாடில்டா பாஜர் நாயகியாக நடிக்கிறார்.
இளையராஜா இப்படத்துக்கு சிம்பொனி இசையை வழங்கியுள்ளார். மாஸ்கோ போ டை ஆர்கெஸ்ட்ராவுடன் பதிவு செய்யப்பட்ட இந்த இசை, படத்துக்கு ஆழத்தையும் வலுவையும் சேர்த்துள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
“தாங்கள் காதலை நேர்மறையான வகையில் முறித்துக் கொள்ள, தனிமையான எஸ்டேட்டுக்கு செல்லும் ஒரு ஜோடி, அங்கு நடக்கும் சம்பவங்களால் எத்தகைய மாற்றங்களைச் சந்திக்கிறார்கள் என்பது இதன் கதை.
பல்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்த பார்வையாளர்களை உணர்வுப்பூர்வமாக இணைக்கும் கதையை, யதார்த்தமாக உருவாக்கி இருக்கிறோம். இப்படம் காதலின் சக்தியைச் சொல்லும். 2026-ம் ஆண்டு காதலர் தினத்தன்று வெளியிடுகிறோம்” என்று இப்படத்தைத் தயாரித்துள்ள 5 நேச்சர்ஸ் மூவிஸ் இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.