ஹாலிவுட் ஒளிப்​ப​தி​வாளர் ஜார்ஜ் ரிச்​மண்ட்

 
ஹாலிவுட்

இமாச்​சலில் பாராகிளைடிங் விபத்து: ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் படு​கா​யம்

நிலா

பிரபல ஹாலிவுட் திரைப்பட ஒளிப்​ப​தி​வாளர் ஜார்ஜ் ரிச்​மண்ட் (54). இவர், ‘கிங்​ஸ்​மேன்’, ‘ராக்​கெட்​மேன்’, ‘அன்​லாக்​டு’, ‘டெட்​பூல் அண்ட் வோல்​வரின்’ உள்பட பல பிரிட்​டிஷ் மற்​றும் ஹாலிவுட் திரைப்​படங்​களுக்கு ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார்.

இவர் இமாச்​சலப் ​பிரதேசத்​துக்கு 5 பேர் கொண்ட குழு​வுடன் சமீபத்​தில் வந்​தார். அங்கு காங்ரா மாவட்​டத்​தின் புகழ்​ பெற்ற பீர் பில்​லிங் பகு​தி​யில் இருந்து தியோ திப்பா மலைப் பகு​தியை நோக்கி ஜூன் 8ம் தேதி நீண்ட தூர பாராகிளைடிங் பயணத்தை மேற்கொண்​டிருந்​தார். சுமார் 12,000 அடி உயரத்​தில், தியோ திப்பா மலைப்​பகு​தி​யின் அருகே உள்ள கரடு​முர​டான நிலப்பரப்பில் அவர் தரை​யிறங்க முயன்​ற​போது, எதிர்​பா​ராத வித​மாக விபத்​துக்​குள்​ளா​னார்.

இதில் அவர் படு​காயமடைந்​தார். விபத்து குறித்து சக பாராகிளைடர்​கள் குலு மாவட்ட நிர்​வாகத்​துக்​குத் தகவல் கொடுத்​தனர். இந்​திய விமானப்​படை ஹெலி​காப்​டர்​கள் மூலம் தீவிர தேடு​தல் வேட்டை நடந்​தது. பின்​னர் ஜார்ஜ் ரிச்​மண்ட் பலத்த காயத்​துடன் மீட்​கப்​பட்டு குலு மருத்​து​வ​மனை​யில் முதலுதவி சிகிச்சை அளிக்​கப்​பட்ட பிறகு சண்​டிகரில் உள்ள மருத்​து​வக் கல்வி மற்​றும் ஆராய்ச்சி நிறு​வனத்​துக்​குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்​குக் கழுத்து மற்​றும் முது​கெலும்​பில் அறு​வைச் சிகிச்சை செய்​யப்​பட்​டது. இப்​போது அவர்​ உடல்​ நலம்​ தேறி வருகிறார்.

SCROLL FOR NEXT