ஹாலிவுட்

பிரபல ஹாலிவுட் நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார்

ப்ரியா

பிரபல ஹாலிவுட் நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட் வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 86. இந்தத் தகவலை நீண்டகாலமாக அவரிடம் செய்தித் தொடர்பாளராக பணியாற்றிய கெல்லி புஸ் நோவக் உறுதிபடுத்தியுள்ளார்.

அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டிருந்த பேட்ரிக் ஸ்டீவர்ட், தனது லாஸ் ஏஞ்சல் வீட்டில் உறவினர்களுடன் இருக்கும்போது காலமானதாக கெல்லி புஸ் நோவக் தெரிவித்துள்ளார்.

திரைப்படங்களில் நடிகராக புகழ் பெறுவதற்கு முன்பு, பேட்ரிக் ஸ்டீவர்ட், பல பத்தாண்டுகளாக ராயல் ஷேக்ஸ்‌பியர் கம்பெனிக்காக அதன் ஷேக்ஸ்‌பியர் நாடகங்களில் நடித்து வந்தார்.  ராயல் ஷேக்ஸ்‌பியர் கம்பெனியின் நீண்ட கால உறுப்பினரான பேட்ரிக் ஸ்டீவர்ட், நாடக நடிப்பிலிருந்து பெற்ற நேர்த்தியான உச்சரிப்பு, கம்பீரத்தை தனது திரைப்பட நடிப்பிலும் வெளிப்படுத்தினார்.

‘எக்ஸ் மேன்’ திரைப்படத் தொடரில் இவர் ஏற்று நடித்திருந்த பேராசிரியர் சார்லஸ் கதாபாத்திரம் பெரும் புகழைப் பெற்றுத்தந்தது. இதை தவிர ‘ஸ்டார் டெர்க்’  படங்களில் நடித்திருந்த கேப்டன் ஜீன் லுக் பிகார்ட் கதாபாத்திரமும் அவருக்கு பெயர் வாங்கித் தந்தது.

அதேபோல் ‘டூன்’ படத்தின் கர்னி ஹாலெக், ‘ராபின் ஹுட்: மென் இன் டைட்’  படத்தின் கிங் ரிச்சர்ட் பாத்திரங்களும் அவரின் பிற புகழ் பெற்ற கதாபாத்திரங்களாகும்.

கடந்த 2015-ம் ஆண்டு தனது வழக்கமான நாயக பாத்திரங்களில் இருந்து விலகி, ‘க்ரீன் ரூம்’ படத்தில் இரக்கமற்ற ஒரு க்ளப் உரிமையாளராக நடித்திருந்தார்.

இரண்டு லாரன்ஸ் விருதுகள், ஒரு கிராமி விருதுகள் மற்றும் பல சாட்ரன் விருதுகள் பெற்றுள்ள பேட்ரிக் ஸ்டீவர்ட், 2009–ம் ஆண்டில், பிரிட்டிஷ் நாடகம் மற்றும் தொலைக்காட்சி துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்காக ராணி இரண்டாம் எலிசபத்திடமிருந்து நைட் பட்டம் பெற்றுள்ளார்.

புகழஞ்சலி: எக்ஸ் மேன் படங்களில் வோல்வரின்னாக நடித்து புகழ்பெற்ற ஹீயுக் ஜக்மேன், பேட்ரிக்கை, சிறந்த நண்பர் மற்றும் மனிதர் என்று நினைவுகூர்ந்துள்ளார்.

மார்வெல் ஸ்டூடியோஸ் வெளியிட்டுள்ள புகழஞ்சலியில், பேட்ரிக் ஸ்டீவர்டின் மறைவால் மார்வல் ஸ்டூடியோஸில் உள்ள அனைவரும் மிகுந்த வருத்தம் அடைகிறோம். பேராசிரியர் சார்லஸ் கதாபாத்திரத்துக்கு தனது நளினம், அறிவுத்திறன் மற்றும் மனிதாபிமானதுடன் உயிர் கொடுத்தார்.

‘எக்ஸ் மேன்’ முதல், ‘லோகன்’, ‘அவஞ்சேர்ஸ்:டூம்ஸ் டே’ வரை பல தலைமுறை ரசிகர்களிடம் அந்த கதாபாத்திரத்தை கொண்டு சேர்த்தார். அவரது குடும்பத்தினர், நண்பர்கள், எண்ணற்ற ரசிகர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்’ என்று தெரிவித்துள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT