ஹாலிவுட்

பிரபல ஹாலிவுட் நடிகர் இட்​ரிஸ் எல்​பாவுக்கு சர் பட்​டம்

நிலா

கலை, அறி​வியல், இலக்​கி​யம் போன்ற பல்​வேறு துறை​களில் சிறந்து விளங்​குபவர்​களுக்​குப் பிரிட்​டிஷ் மன்​னர் அல்​லது ராணியால் சர் பட்​டம் வழங்​கப்​பட்டு வரு​கிறது. அதன்​படி இப்போது, பிரபல ஹாலிவுட் நடிகர் இட்​ரிஸ் எல்​பாவுக்கு "சர்" பட்டம் வழங்​கப்​பட்​டுள்​ளது.

லண்​டனில் உள்ள பக்​கிங்​ஹாம் அரண்​மனை​யில் நடை​பெற்ற அரசு விழா​வில், அரசர் சார்​லஸ் இந்​தப் பட்​டத்தை அவருக்கு வழங்கி கவுர​வித்​தார். இதன் மூலம் அவர் இனி ‘சர் இட்​ரிஸ் எல்​பா’ என்று அழைக்​கப்​படு​வார். கலைத்​துறைக்கு அவர் ஆற்​றிய சிறந்த பங்​களிப்​புக்​காக​வும் அவரது சமூக நலப் பணிகளுக்காகவும் இந்த உயரிய விருது அவருக்கு வழங்கப்பட்டுள்​ளது.

விருதைப் பெற்​றுக் கொண்ட இட்​ரிஸ் எல்​பா, “இந்த கவுர​வத்தை முற்​றி​லும் எதிர்​பார்க்​க​வில்​லை. அரசர் சார்​லஸ் கைகளில் இருந்து இந்த விருதைப் பெற்​றது என் வாழ்​நாளின் மிக நெகிழ்ச்சியான தருணம். எனக்கு ஆதர​வாக இருந்த அனைவருக்கும், எனது கலைப் பயணத்தை அங்​கீகரித்த பிரிட்டிஷ் ராஜ குடும்​பத்​துக்​கும் மனமார்ந்த நன்​றி” என்று தெரிவித்​துள்​ளார்.

நடிகர் இட்​ரிஸ் எல்​பா, தோர், அவெஞ்​சர்ஸ் வரிசைத் திரைப்​படங்கள், பாஸ்ட் அண்ட் பியூரியஸ், த சூசைட் குவாட், மண்​டேலா: லாங் வாக் டு ஃப்​ரீடம் உள்பட பல புகழ்​பெற்ற திரைப் ​படங்​களில் நடித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT