ஹாலிவுட்

அக்​.16-ல் வித்​யுத் நடிக்கும் ‘ஸ்ட்​ரீட் ஃபைட்​டர்’ ரிலீஸ்

நிலா

வித்​யுத் ஜாம்​வால் நடித்​துள்ள ஹாலிவுட் படம், ‘ஸ்ட்​ரீட் ஃபைட்​டர்’. இதில், நோவா சென்​டினியோ, ஆண்ட்ரூ கோஜி, கல்​லினா லியாங், ஜோ அனோ​யி, டேவிட் டாஸ்ட்​மால்​சி​யன் உள்​ளிட்ட பலர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர்.

கிடாவோ சகு​ராய் இயக்​கி​யுள்ள இந்​தப் படம், பிரபலமான வீடியோ கேம் தொடரை அடிப்​படை​யாகக் கொண்டு உருவாகியுள்​ளது. பாரமவுண்ட் பிக்​சர்​ஸ், லெஜண்​டரி என்டர்டெயின்​மென்ட், கேப்​காம் இணைந்து தயாரித்​துள்ள இப்படத்​தில் வித்​யுத் ஜாம்​வால், பிரபல கதா​பாத்​திர​மான தல்​சிம் வேடத்​தில் நடித்​துள்​ளார். இப்​படத்​தின் டீஸர் இப்​போது வெளியாகி வரவேற்​பைப் பெற்​றுள்​ளது.

1993-ம் ஆண்டில் நடப்பதுபோன்ற இப்​படத்​தில், பிரிந்து வாழும் போர்​ வீரர்​களான ரியூ (ஆண்ட்ரூ கோஜி) மற்​றும் கென் மாஸ்டர்ஸ் (நோவா சென்​டினியோ) ஆகியோர், மர்​ம​மான சுன்​-லி (கல்லினா லியாங்) அழைப்பை ஏற்று ‘வேர்ல்ட் வாரியர் டோர்னமென்ட்’ என்ற சண்​டைப் போட்​டி​யில் பங்​கேற்​கின்​றனர்.

இந்​தப் போட்​டிக்​குப் பின்​னால் மிகப்​பெரிய சதித்​திட்​டம் மறைந்திருப்​பதை அவர்​கள் கண்​டறிகின்​றனர். தங்களது கடந்​த​கால நினை​வு​களை​யும், ஒரு​வரையொரு​வர் எதிர்​கொள்ள வேண்டிய சூழ்​நிலை​யும் உரு​வாகிறது. பிறகு என்ன நடக்​கிறது என்​பது கதை. இப்​படம் அக்.16-ல் வெளி​யாகிறது.

SCROLL FOR NEXT