நடிகை கேய்லி ஹாட்​டில்

 
ஹாலிவுட்

‘காட்​ஸில்லா வெர்​சஸ் காங்’ படத்தில் நடித்த கேய்லி ஹாட்டில் கார் விபத்தில் மரணம்

நிலா

‘காட்​ஸில்லா வெர்​சஸ் காங்’ மற்​றும் ‘காட்​ஸில்லா x காங்: த நியூ எம்​பயர்’ திரைப்​படங்​களில் ஜியா என்ற காது கேளாத சிறுமி கதா​பாத்​திரத்​தில் நடித்​தவர் கேய்லி ஹாட்​டில். இப்​படங்​களின் மூலம் உலகம் முழு​வதும் உள்ள ரசிகர்​களின் மனங்​களில் இடம்​பிடித்த இவர், பிற​வி​யிலேயே காது கேளாதவர்.

அவரது தந்​தை​யின் குடும்​பத்​தில் 4 தலை​முறை​களாக காது கேளாதவர்​கள் இருந்​த​தால், சைகை மொழி அவரது வாழ்க்கையின் இயல்​பான அங்​க​மாக இருந்​தது. சிறுவயதிலிருந்தே தன்​னம்​பிக்கை மிக்​கவ​ராக வளர்ந்த அவர், காது கேளாதோருக்​கான பிர​தி​நி​தித்​து​வத்தை ஹாலிவுட்​டில் வலுப்​படுத்​திய நடிகை​களில் ஒரு​வ​ராகக் கருதப்​பட்​டார்.

கடந்த 2021-ல் வெளி​யான ‘காட்​ஸில்லா வெர்​சஸ் காங்’ திரைப்படத்​துக்​காக, காது கேளாத சிறுமி கதா​பாத்​திரத்​தில் நடிக்க உண்​மை​யிலேயே அப்​படி​யான ஒரு நடிகை​யைத் தேடிய படக்​குழு, கேய்​லியைத் தேர்ந்​தெடுத்​தது. பின்​னர், 2024-ல் வெளியான ‘காட்​ஸில்லா x காங்: த நியூ எம்​பயர்’ படத்​தி​லும் அதே கதா​பாத்​திரத்​தில் நடித்​தார். திரைப்​படங்​களு​டன் சேர்த்​து, விளம்பரங்​கள், தொலைக்​காட்சி நிகழ்ச்​சிகளி​லும் அவர் தோன்றியுள்​ளார்.

இந்​நிலை​யில் அமெரிக்​கா​வின் மேரிலாண்ட் பகு​தி​யில் நடந்த கார் விபத்​தில் அவர் உயி​ரிழந்​தார். அவருக்கு வயது 18. சாலையை விட்டு விலகிய அவரது கார் மோதி நொறுங்கியதாகவும், அதிக வேகம் காரண​மாக இந்த விபத்து நடந்​திருக்​கலாம் எனவும் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. அவர் மறைவுக்கு ஹாலிவுட் திரை​யுல​கினர் இரங்​கல் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT