உலகளவில் அதிக வசூல் செய்த திரைப்படமாக, ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ல் வெளியான ‘அவதார்’, முதலிடத்தில் இருந்து வந்தது. இப்படம் தற்போதைய நிலவரப்படி, இந்திய மதிப்பில் ரூ.28,138 கோடி (2.923 பில்லியன் டாலர்) வசூல் செய்தது.
2-வது இடத்தில் 2019-ம் ஆண்டு வெளியான ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ படம் இருந்து வந்தது. இந்நிலையில், ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ படம், ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் என்கோர்’ என்ற பெயரில் கடந்த செப்.25-ல் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு உலகளவில் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், இதன் ரீ-ரிலீஸையும் சேர்த்து, மொத்தமாக இந்திய மதிப்பில் ரூ.28,156 கோடி வசூல் செய்துள்ள இப்படம், ‘அவதார்’ படத்தின் வசூலை சிறிய அளவில் முறியடித்து, முதலிடத்தைப் பிடித்துள்ளது.