ஹாலிவுட்

‘சினிமா என் தொழில் மட்டும் அல்ல’ - கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் நெகிழ்ச்சி

செய்திப்பிரிவு

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ், உலகம் முழு​வதும் ஏராளமான ரசிகர்​களைக் கொண்​டுள்​ளார். மிக​வும் ஆபத்​தான ஸ்டன்ட் காட்​சிகளை​யும் சாதா​ரண​மாக நடித்து மிரட்​டு​வார்.

1980களில் அறி​முக​மான இவர், ‘டாப் கன்’ உள்​ளிட்ட திரைப்​படங்​களில் நடித்து பிரபலமடைந்​தார். இவருடைய ‘மிஷன் இம்​பாசிபிள்’ வரிசை படங்​களின் மூலம் அதி​க​மான ரசிகர்​களைப் பெற்​றார். இவர் நடிப்​பில் கடைசி​யாக ‘மிஷன் இம்​பாசிபிள்: த பைனல் ரெக்​க​னிங்’ படம் வெளி​யாகி வரவேற்​பைப் பெற்​றது.

அஸ்​கர் பரிந்​துரை பட்​டியலில் சில​முறை அவர் பெயர் இடம் பெற்றிருந்​தும் அவருக்​குச் சிறந்த நடிகருக்​கான ஆஸ்​கர் விருது இது​வரை கிடைக்​க​வில்​லை. இந்​நிலை​யில் அவருக்கு கவுரவ ஆஸ்​கர் விருது, லாஸ் ஏஞ்​சல்​ஸில்

நடந்த நிகழ்ச்​சி​யில் வழங்​கப்​பட்​டது. மெக்​ஸிகன் இயக்​குநர் அலெஜாண்ட்ரோ இன்​னாரிட்டு கையால் விருதைப் பெற்​றார் டாம் குரூஸ்.

பின்​னர் பேசிய டாம் குரூஸ், “சினி​மா, உலகம் முழு​வதும் என்னை அழைத்​துச் செல்​கிறது. வேறு​பாடு​களை மதிக்​கக் கற்​றுக்​கொடுக்​கிறது. நமக்​கெல்​லாம் ஒரே மனிதத் தன்மை இருப்​பதை நினை​வூட்​டு​கிறது. ஒரு திரையரங்​கில் ஒன்​றாகச் சிரிக்​கிறோம், உணர்​கிறோம், நம்​பு​கிறோம். இதுவே இந்த கலை வடிவத்​தின் சக்​தி. சினிமா எடுப்​பது என் தொழில் மட்​டும் அல்ல; அது நான் யார் என்​ப​தை​யும் காட்​டு​கிறது.

சின்ன வயதில் இருண்ட திரையரங்​கில் அமர்ந்து பெரிய திரை​யில் விழும் ஒளியைப் பார்த்​தபோது, எனக்​குள் ஒரு புதிய உலகம் திறந்​தது. அது என் சாகசத்​துக்​கான பசி​யை, அறி​வுக்​கான ஆர்​வத்​தை, உலகத்​தைப் புரிந்​து​கொள்​ளும் பேராசையை உரு​வாக்​கியது. அதைப்​ பின்​ தொடர்​ந்​தே இன்​று வரை வந்​திருக்​கிறேன்​” என்​று தெரி​வித்​தார்.

SCROLL FOR NEXT