ஹாலிவுட்

நந்தியாலம் இடைத்தேர்தல்பிரச்சாரம் ஓய்ந்தது

என்.மகேஷ் குமார்

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம், நந்தியாலம் சட்டமன்ற தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பூமா நாகிரெட்டி. அதன் பிறகு இவர் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். இந்நிலையில் பூமா நாகிரெட்டி சமீபத்தில் மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அவரது மகள் அகில ப்ரியாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில், நந்தியாலம் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தாது என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அக்கட்சி வேட்பாளரை நிறுத்தியதால் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதையடுத்து இரு கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்காக எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

வரும் 28-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT