ஹாலிவுட்

தமிழில் வெளியாகிறது தி லிட்டில் மெர்மெய்ட்

செய்திப்பிரிவு

ராப் மார்ஷல் இயக்கியுள்ள ஹாலிவுட் திரைப்படம், ‘தி லிட்டில் மெர்மெய்ட்’. டிஸ்னி தயாரிப்பில், ஜான் மஸ்கர், ரான் கிளமன்ட்ஸ் இயக்கத்தில் 1989ம் ஆண்டு, இதே பெயரில் உருவான அனிமேஷன் படத்தைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ள இதில், ஹாலே பெய்லி, ஜோனா ஹவுர்-கிங், டேவிட் டிக்ஸ், ஆக்வாஃபினா உட்பட பலர் நடித்துள்ளனர்.

ஏரியல் என்ற கடல் கன்னியின் கதைதான் படம். நிலத்தில் வசிக்கும் இளவரசர் எரிக்கிடம் காதல் வசப்படும் ஏரியல், கடல் சூனியக்காரி உர்சுலாவுடன் ஒப்பந்தம் செய்து நிலத்தில் வாழும் வாய்ப்பைப் பெறுகிறாள். இறுதியில் இது அவள் வாழ்க்கையையும், அவள் தந்தையின் கிரீடத்தையும் ஆபத்தில் கொண்டு சேர்க்கிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.

இந்தப்படம் மே 26-ம் தேதி வெளியாகிறது. இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியாகிறது.

SCROLL FOR NEXT