‘தோர்’ என்ற ஹாலிவுட் சீரிஸ் படங்களில் நடித்து புகழ்பெற்றவர், ஆஸ்திரேலிய நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த். இவருக்கு சமீபத்தில் வழக்கமான உடல் பரிசோதனை நடந்தது.
அப்போது அல்சைமர் எனப்படும் ஞாபகமறதி நோய்க்கான மரபணுக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவை அந்த நோயை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
“இதை அனுதாபத்திற்காகக் கூறவில்லை. என் தாத்தாவுக்கும் இந்த நோய் ஏற்பட்டது. அதனால், இந்தச் செய்தி எனக்கு ஆச்சரியப்படுத்தவில்லை” என்று தெரிவித்துள்ள கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் நடிப்பில் இருந்து சில காலம் ஓய்வு பெற இருக்கிறார்.