ஹாலிவுட்

டேனியல் கிரெய்க்குக்கு இங்கிலாந்து கவுரவம்

செய்திப்பிரிவு

பிரபல ஹாலிவுட் நடிகர் டேனியல் கிரெய்க். இவர் தொடர்ந்து 5 ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நடித்தார். கடைசியாக, ‘நோ டைம் டு டை’ என்ற பாண்ட் படத்தில் நடித்திருந்தார். இது 2021ம் ஆண்டு வெளியானது. இனி பாண்ட் படங்களில் நடிக்கப் போவதில்லை என்று அறிவித்துவிட்டார் கிரெய்க்.

இந்நிலையில் சினிமா மற்றும் நாடகத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்புக்காக, ‘தி ஆர்டர் ஆஃப் செயின்ட் மைக்கேல் மற்றும் செயின்ட் ஜார்ஜ்’ பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டார். படத்திலும் இந்த கவுரவத்துடன்தான் பாண்ட் கேரக்டர் படைக்கப்பட்டிருக்கும். நிஜத்திலும் அந்தப் பட்டத்தை அவர் பெற்றுள்ளார்.

மறைந்த ராணியின் மகள் இளவரசி ஆன் அவருக்கு இந்த கவுரவத்தை வழங்கினார். டேனியல் கிரெய்க், பிரிட்டிஷ் ராயல் கடற்படையின் கவுரவ தளபதியாக, கடந்த 2021-ம் வருடம் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT