ஹாலிவுட்

கார் விபத்தில் சிக்கிய ஹாலிவுட் நடிகை உயிரிழப்பு

செய்திப்பிரிவு

கார் விபத்தில் சிக்கி சிகிச்சைப் பெற்று வந்த ஹாலிவுட் நடிகை அன்னே ஹெச் உயிரிழந்தார். அவருக்கு வயது 53. இவர், வால்கோனா, ஐ நோ வாட் யு டிட் லாஸ்ட் சம்மர், வாக் த டாக், சிக்ஸ் டேஸ் செவன் நைட்ஸ், சைக்கோ உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் புறநகர் பகுதியில், தனதுகாரில் கடந்த 5ம் தேதி சென்றுகொண்டிருந்தபோது, விபத்தில் சிக்கினார். கார் தீப்பிடித்து எரிந்ததில் அன்னேஹெச் படு காயமடைந்தார்.ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்

SCROLL FOR NEXT