பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் தான் நடித்துவரும் படமான 'அலைட்' (Allied) படப்பிடிப்பைப் பார்க்க வந்த சிறுமி கூட்டத்தில் சிக்கியதைக் கவனித்து மீட்டிருக்கிறார்.
லாஸ் பால்மாஸ் நகரில், ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் தனது 'அலைட் படப்பிடிப்பில் இருக்கும்போது இச்சம்பவம் நடந்திருக்கிறது.
படப்பிடிப்பைக் காண வந்த ஏராளமானோர், பிராட் பிட்டுடன் புகைப்படங்கள் மற்றும் செல்ஃபிக்கள் எடுத்துக்கொள்ள ஆர்வமுடன் முண்டியடித்தனர். இதனால் பிராடைக் காண வந்திருந்த சிறுமி ஒருவர் நெரிசலுக்கு இடையே சிக்கிக் கொண்டார்.
அந்தச் சிறுமி மீட்டு கையைப் பிடித்து அழைத்துச் சென்ற பிராட் பிட், தனது மெய்க்காப்பாளர்களின் உதவியோடு சிறுமியின் தாயிடம் ஒப்படைத்திருக்கிறார்.
இது தொடர்பாக ஸ்பெயின் நாளிதழ், 'பாதுகாப்பு வளையத்துக்கு எதிரே சிக்கிக்கொண்டு காயமடைய இருந்த சிறுமி ரசிகையை, பிராட் பிட் கண்டுபிடித்துக் காப்பாற்றினார்' என்று தெரிவித்துள்ளது.
'அலைட்' படத்தில் பிராட் பிட் துப்பறியும் அதிகாரியாக நடித்து வருகிறார்.