ஹாலிவுட்

தனுஷ் வரும் அந்த ஒற்றை ஃப்ரேம்... வெளியானது ‘தி கிரே மேன்’ ட்ரெய்லர்

செய்திப்பிரிவு

ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ இயக்கத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் ஒருவராக தனுஷ் நடிக்கும் 'தி கிரே மேன்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

ரூ.1500 கோடி பொருட் செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் 'தி கிரே மேன்'. 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்', 'எண்ட்கேம்', 'கேப்டன் அமெரிக்கா வின்டர் சோல்ஜர்', 'சிவில் வார்' போன்ற படங்களை இயக்கிய ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ ஆகிய சகோதர்கள் இந்தப் படத்தை இயக்கியுள்ளனர். இந்தப் படத்தில் ரையான் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ், அனா டி அர்மாஸ், ஜெசிக்கா ஹென்விக் ஆகிய பிரபலங்களுடன் இணைந்து நடிகர் தனுஷ் நடித்துள்ளார்.

இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்றது. அதற்காக நடிகர் தனுஷ் சுமார் மூன்று மாத காலம் அமெரிக்காவில் தங்கியிருந்து படப்பிடிப்பை முடித்துக் கொடுத்தார். அந்தப் படத்திற்கான இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூலை 22-ம் தேதி வெளியாக உள்ளது.

தெறிக்கும் தோட்டாக்களுடன், துப்பாக்கி சத்தம், ஒலிக்க, சண்டைக்காட்சிகளுடன் விறுவிறுப்பாக செல்லும் இந்த ட்ரெய்லர் படத்தின் ஒட்டுமொத்த சாரசம்சத்தையும் விளக்கிவிடுகிறது.

முழுக்க முழுக்க ஒரு ஆக்‌ஷன் பேக்கேஜாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லரின் ஒரு ஃப்ரேமில் மட்டும் தனுஷ் காட்டப்படுகிறார். ரூ.1500 கோடி பட்ஜெட்டின் நியாயத்தை புரிய வைக்கும் இந்த ட்ரெய்லர் ஹாலிவுட் பட ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

SCROLL FOR NEXT