ஹாலிவுட்

இந்தியாவில் 200 கோடி வசூலை நெருங்கும் தி ஜங்கிள் புக்

ஐஏஎன்எஸ்

டிஸ்னி வெளியீட்டில், இந்தியக் காட்டை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த 'தி ஜங்கிள் புக்' திரைப்படம், தற்போது இந்தியாவில் மட்டும் 180 கோடிகளை வசூல் செய்துள்ளது.

இதுகுறித்துப் பேசிய டிஸ்னி இந்தியாவின் துணைத் தலைவர் அம்ரிதா பாண்டே,

'''தி ஜங்கிள் புக்' பட வசூல் எங்களுக்கு அதிக ஊக்கத்தை அளிக்கிறது. இந்தியாவில் வெளியிடப்பட்ட ஆங்கிலப் படங்களில் 'தி ஜங்கிள் புக்' புது சாதனையைப் படைத்திருக்கிறது. இந்த திரைப்படம் வயது, இனம், மொழி தாண்டி இந்தியா முழுக்கவுள்ள அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக ஈர்த்திருக்கிறது" என்றார்.

விமர்சகர்கள், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இந்தப் படம், ஏப்ரல் 8-ம் தேதி இந்தியாவில் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் வெளியானது.

இந்தப் படத்தின் இந்திப் பதிப்புக்கு இர்ஃபான் கான், பிரியங்கா சோப்ரா, நானா படேகர், ஷெஃபாலி ஷா, ஓம் புரி உள்ளிட்டோர் குரல் கொடுத்திருந்தனர்.

'அயர்ன் மேன்' பட இயக்குநர் ஜான் ஃபேவ்ரூ இயக்கிய இந்தப் படத்தில், நீல் சேத்தி என்ற இந்திய வம்சாளிச் சிறுவன் மோக்லி வேடத்தில் நடித்திருந்தார். சிறுவனைத் தவிர படத்தில் இருக்கும் மற்ற அனைத்து பாத்திரங்களும் கிராபிக்ஸால் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT