ஆஸ்கர் விருது வென்ற ‘கோடா’ திரைப்படத்தில் ஒரு காட்சி. 
ஹாலிவுட்

நடிகர் வில் ஸ்மித், ‘கோடா’ படத்துக்கு ஆஸ்கர் விருது; 6 பிரிவுகளில் விருதுகளை அள்ளிய ‘டியூன்’

செய்திப்பிரிவு

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த படமாக ‘கோடா’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. 3 பிரிவுகளில் இப்படம் விருது வென்றது. சிறந்த நடிகர் விருது வில் ஸ்மித்துக்கு வழங்கப்பட்டது. ‘டியூன்’ திரைப்படம் அதிகபட்சமாக 6 பிரிவுகளில் விருதை வென்றுள்ளது.

94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. கடந்த 4 ஆண்டுகளாக தொகுப்பாளர்கள் இன்றி நடத்தப்பட்ட இந்த விழாவை, இந்த ஆண்டு வாண்டா சைக்ஸ், ஏமி ஸ்கூமர், ரெஜினா ஹால் ஆகியோர் தொகுத்து வழங்கினர். ஆஸ்கர் விழாவை 3 பெண்கள் தொகுத்து வழங்குவது இதுவே முதல்முறை.

இந்த விழாவில், சிறந்த படமாக ‘கோடா’ (Coda) தேர்வு செய்யப்பட்டது. சிறந்த துணை நடிகர், சிறந்த தழுவல் திரைக்கதை ஆகிய பிரிவுகளிலும் இப்படம் விருது வென்றது.

ஆஸ்கர் விருதுடன் வில் ஸ்மித்.

சிறந்த ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை, ஒலியமைப்பு, காட்சி அமைப்பு, தயாரிப்பு வடிவமைப்பு ஆகிய 6 பிரிவுகளில் ‘டியூன்’ படம் ஆஸ்கர் விருது வென்றது.

‘கிங் ரிச்சர்டு’ படத்துக்காக வில் ஸ்மித்துக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. அவர் பெறும் முதல் ஆஸ்கர் விருது இது. அமெரிக்க டென்னிஸ் வீராங்கனைகள் வீனஸ் வில்லியம்ஸ், செரினா வில்லியம்ஸின் தந்தை ரிச்சர்டு வில்லியம்ஸின் வாழ்க்கை கதையைத் தழுவி உருவாக்கப்பட்ட இப்படத்தில் ரிச்சர்டு வில்லியம்ஸாக வில் ஸ்மித் நடித்துள்ளார்.

சிறந்த இயக்குநர் ஜானே கேம்பியன்

மற்ற விருதுகள் விவரம்

சிறந்த இயக்குநர்: ஜானே கேம்பியன் (‘தி பவர் ஆஃப் த டாக்)

சிறந்த நடிகை: ஜெசிகா சாஸ்டைன் (‘தி ஐஸ் ஆஃப் டேம்மி ஃபேய்’)

துணை நடிகர்: ட்ராய் கோட்சர் (‘கோடா’)

துணை நடிகை: அரியானா டிபோஸ் (‘வெஸ்ட் சைடு ஸ்டோரி’)

சிறந்த திரைக்கதை: கென்னத் ப்ரனாக் (‘பெல்ஃபாஸ்ட்’)

தழுவல் திரைக்கதை: சியான் ஹெடர் (‘கோடா’)

ஒரிஜினல் பாடல்: பில்லி எய்லிஷ், ஃபின்னியாஸ் ஓ கானல் (‘நோ டைம் டு டை’)

அனிமேஷன் திரைப்படம்: ‘என்கான்டோ’

அனிமேஷன் குறும்படம்: ‘தி விண்ட்ஷீல்டு வைபர்’

ஆவணப்படம்: ‘தி லாங் குட்பை’

சிகை, ஒப்பனை: ‘தி ஐஸ் ஆஃப் டேம்மி ஃபேய்’

வெளிநாட்டு திரைப்படம்: ‘டிரைவ் மை கார்’ (ஜப்பான்)

ஆடை வடிவமைப்பு:

ஜென்னி பீவன் (‘க்ரூயல்லா’)

SCROLL FOR NEXT