ஹாலிவுட்

அனிமேஷன் படத்தின் நாயகனாகும் கேயானு ரீவ்ஸ்

ஐஏஎன்எஸ்

‘தி மேட்ரிக்ஸ்’, ‘ஸ்பீட்’ 'ஜான் விக்’ உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் கேயானு ரீவ்ஸ். தற்போது ‘மேட்ரிக்ஸ்’ நான்காம் பாகத்தில் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பூம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் BRZRKR என்னும் காமிக்ஸை மேட் கிண்ட், ஓவியக் கலைஞர் அலெஸ்ஸாண்ட்ரோ விட்டி, கலரிஸ்ட் பில் க்ராப்டீ ஆகியோருடன் இணைந்து ரீவ்ஸ் உருவாக்கினார்.

பல நூற்றாண்டுகளாக நீண்ட ஆயுளுடன் வாழும் ஒரு போர் வீரனை பற்றிய ரத்தம் தோய்ந்த கதையை பற்றி பேசுகிறது இந்த காமிக்ஸ். தன்னை பற்றிய ரகசியத்தை தெரிந்து கொள்வதற்காக அமெரிக்க அரசுக்கு உதவுகிறார் அந்த வீரன். காமிக்ஸின் நாயகனுக்கு கேயானு ரீவ்ஸ் போன்ற தோற்றம் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது இப்படம் அனிமேஷன் சீரிஸ் வடிவில் தயாராகவுள்ளது. இதில் நாயகன் ‘பி’ கதாபாத்திரத்தில் கேயானு ரீவ்ஸ் நடிக்கவுள்ளார். மேலும் இந்த சீரிஸ் பல பாகங்களாக தயாரிக்கப்படவுள்ளதாகவும் இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தை கேயானு ரீவ்ஸே தயாரிக்கவும் செய்கிறார்.

SCROLL FOR NEXT